RSS

ஷுபோ மஹாளையா!

27 Sep

மஹாளய அமாவாசை – மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்நாள் நம் ஊரில் பித்ருக்களை நினைத்து வணங்குகிறோம். வங்காளத்தில் இன்றுதான் துர்கா பூஜா பந்தல்களில் வைக்கப்படும் துர்கை சிலைகளுக்குக் கண் வரைவார்கள். துர்க்கை சிலை செய்வதற்கான முதல்பிடி மண்ணாக ஒரு விலைமகளின் காலடி மண்ணைத்தான் பயன்படுத்துவார்கள். இதையொட்டி நரசய்யா எழுதிய ஒரு சிறுகதையை விகடனில் படித்த நினைவு. பெயர் நினைவில்லை.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் சேர்வேன் என்று அடம்பிடித்து அம்மாவின் இமோஷனல் ப்ளாக்மெயிலால் தோல்வியடைந்து துளியும் ஆர்வமில்லாத பொறியியல் படிப்பில் பொறியில் சிக்கிய எலிபோல் கல்லூரியில் சிக்கிய நாள். 27.9.2000, an unforgettable day in my life. 11 வருடங்கள் போனதே தெரியவில்லை.

What a coincidence! அன்றும் மஹாளய அமாவாசை 🙂

ஷுபோ மஹாளையா !

 
4 Comments

Posted by on September 27, 2011 in Celebrations, Functions

 

4 responses to “ஷுபோ மஹாளையா!

  1. K R A Narasiah

    January 1, 2012 at 7:30 pm

    எப்படியோ இன்று எனக்கு இந்த இடுகை கண்ணில் பட்டது. நான் எழுதிய கதையை அதில் குறிப்பிட்டிருந்த்தால் முழுமையாகப் பார்த்தேன். நான் எழுதிய அக்க்தையின் பெயர் ‘அவள் வீட்டு வாசல் மண்’
    நரசய்யா

     
    • Kaarthik Arul

      January 2, 2012 at 12:42 pm

      @K R A Narasiah, வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. பலரிடம் அக்கதையின் தலைப்பைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதை எழுதிய எழுத்தாளர் மூலம் அறிவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை!

       
      • K R A Narasiah

        December 29, 2014 at 9:35 am

        இன்றுதான் இவ்விடுகையைப் பார்க்க நேர்ந்த்து.ஆம் நான் எழுதிய கதை விகடனில் 20-102002 அன்று பவஅ விழா முத்திரை கதையாக் வெளி வந்தது. கதையின் பெயர் அவள் வீட்டு வாசல் மண். நரசய்யா

         
  2. K R A Narasiah

    January 20, 2019 at 11:19 am

    பல நாட்களுக்குப் பின் மறுபடியும் இவ்விடுகை என் கவனத்திற்கு வந்தது. நீங்கள் கொல்கத்தாவில் வாழ்கிறீர்களா? நான் கப்பலில் பொறியாளராக இருந்தபோது கொல்கத்தா எங்களுக்குக் home port! Narasiah

     

Leave a comment