RSS

கங்கை நீரும் கானல் நீரும்

23 Oct

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று. மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனது பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி ராஜாவின் இசையில் முதலில் இந்தப் பாடல்தான் கேட்பேன். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. வாலியின் வரிகளும் ராஜாவின் இசையும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும். இந்த வரி ஒரு பொதுவான உண்மை. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியும், கானல் நீரால் ஒருபோதும் முடியாது. அப்படியிருக்கையில் இந்த வரி மிகச் சாதாரணமாக இருக்கிறது. கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையை கானல் நீருக்கும் அல்லவா உருவகப் படுத்தியிருக்க வேண்டும்? அதுவே கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் கவித்துவமாக இருந்திருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் மகேஷ் தன் பதிவொன்றில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபோதும் இதைப் பின்னூட்டமாக இட்டேன். இப்போது அவர் வலைப்பூவை நீக்கிவிட்டார். விகடன் மேடையில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பி.யிடம் கேட்கத் தோன்றியது. சோம்பேறித்தனத்தால் எழுதிப் போடவில்லை. ட்விட்டரில் மதன்கார்க்கியிடம் இதுபற்றி கேட்டபோது என்னுடன் அவர் உடன்பட்டார். வாலியைச் சந்திக்க நேர்ந்தால் இந்தச் சந்தேகத்தைக் கேட்கச் சொல்லியிருக்கிறேன். பார்ப்போம்!

என்.சொக்கனின் தாள்/தாழ் சந்தேகத்திற்குப் பிறகு இதைப் பதிவு செய்யத் தோன்றியது.

 
10 Comments

Posted by on October 23, 2011 in Chummaa, Ilayaraja, K.Balachander, Music

 

10 responses to “கங்கை நீரும் கானல் நீரும்

  1. manojkumar

    October 23, 2011 at 11:33 am

    thaali katnathunala ava maniviye thavira , ava kitta hero entha santhosamum kedaikala… so manaivi thaan kaanal neer… valipokki a irunthalum avangalukula oru chemistry irunthuchu… athanala ava gangai neer a thaagatha thanichidara…. so kavithai correct thaane?? eppudiii 😀

     
    • Kaarthik Arul

      October 23, 2011 at 12:52 pm

      @Manoj, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! இதேபோல்தான் நானும் முதலில் அர்த்தப் படுத்திக் கொண்டேன். ஆனால் அந்த முரண் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

       
  2. Aishwarya Govindarajan

    October 24, 2011 at 10:57 pm

    இது கதையை ஒட்டி வரும் வரிகள் ஆகையால் இவ்வாறு இருப்பதே பொருந்தும்.தனித்துப் படித்தால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்டது போன்ற வரிகள் பொருள் அழகுடன் இருக்கும்.படத்தின் படி கௌரியுடனான பாரதியின் வாழ்க்கை ஒரு கானல் நீர் என்பதையும் தாண்டி.கௌரி,ஜோதி என தனி இருவரின் இயல்பினை அவ்வரிகள் கூறுவது போலத் தோன்றும். கங்கை நீரின் புனிதம் நிரந்தரம்.பாரதி தனக்குள் தானே கெளரியின் இயல்புகள் இவை என உருவகப் படுத்திக்கொண்டது, கானல் நீர்.தாகம் என்பது அங்கு மண வாழ்க்கையை குறிக்கலாம். இதே போல் ரோஜாவைத் தாலாட்டும் பாடலிலும் சிறிது வார்த்தை மாற்றம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று முன்பு ஒரு முறை நீங்கள் பதிவு செய்திருந்ததாக நினைவு..!

     
    • Kaarthik Arul

      November 3, 2011 at 12:29 am

      @Aishwarya, ஒருவேளை நான் சொன்னதுபோல் வாலி எழுதி இருந்து, அதெப்படி கௌரியை கங்கையுடனும் ஜோதியைக் கானலுடனும் ஒப்பிடலாம் என நான் எழுதியிருந்தால், அப்போதும் வாலிக்குத்தன் ஆதரவளித்து நியாயப் படுத்தியிருப்பீர்கள் 😉

      நீங்கள் குறிப்பிட்டது இதைத்தானே ? – https://plus.google.com/110395138392804630043/posts/dD26WXbLyz6

       
      • Aishwarya Govindarajan

        November 4, 2011 at 7:07 am

        தங்கள் அனுமானத்திற்க்கான பதில், ‘இல்லை!’
        நாங்கள் அவர் எத்தகைய தமிழ்த் துண்டு ஆட்டினாலும் அதை ரசிப்பவர்கள் இல்லை.

        ஆம்,இந்த பஸ்தான். 🙂

        பி.கு :இல்பொருள் உவமை அணிவரைக் கூறியவர் இப்பாடலைப் பாடியவர் பற்றியும் இந்த பதிவில் எங்கேனும் குறிப்பிட்டிருக்கலாம்.

         
      • Kaarthik Arul

        November 19, 2011 at 8:29 pm

        பாடலைப் பாடியவரைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? 🙂

         
  3. பாலா

    October 28, 2011 at 11:51 pm

    டேய்… நல்ல டவுட்.. ரொம்ப வெயிலா இருக்கும்போது தூரத்துல இருக்கிற மாதிரி தெரியறது தான் கானல் நீர்… தாகம் தீர்கும்னு பக்கதுல போக போக இன்னும் கொஞ்ச தூரத்துல இருக்கிற மாதிரி தெரியும்… மொத்ததுல அது வெறும் ஏமாற்றமே தந்து கொண்டிருக்கும்… ஆனால் கங்கை நீர் நம்ம நாடுல ரொம்ப விசாலமான ஒரு நதி… அதுவும் இல்லாம எல்லாரோட பாவங்களையும் கழுவகூடிய அளவுக்கு புனிதத் தன்மை உள்ளதாக கருதக்கூடியது…

    அந்த படத்துலயும் அப்படி தான்… பாட்டு மட்டுமே உலகம்னு இருக்குற அந்த ஹீரோ, தன் மனைவியின் உருவில் ஒரு நட்பையும், வாழ்க்கை துணையையும், அதற்கான அன்பையும் எதிர்பாக்கிறான்… ஆனால் அவன் ஒவ்வொரு தடவை எதிர் பார்க்கும் போதும், ஏமாற்றம் மட்டுமே கிடைகிறது…. ஆனால் எங்கிருந்தோ வரும் ஒருத்தி அவனையும், அவன் சோகத்தையும் புரிந்து கொள்கிறாள்… பகிர்ந்தும் கொள்கிறாள்… அவளுடைய நட்பால் அவன் இத்தனை நாளாக ஏங்கிக் கொண்டிருந்த அன்பை உணர்கிறான்… அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அவள் நட்பை புனிதமாக கருதுகிறான்…

    so அவன் தன் மனைவியை ஏமாற்றம் தரும் கானல் நீராகவும்… தோழியையும், அவள் தன் நட்பையும் கங்கை நீரின் புனிதமாகவும் பாடுகிறான்…

    எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது… இந்த பாடல் வரும் படமும் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று…

     
    • Kaarthik Arul

      November 3, 2011 at 12:21 am

      பலா, நானும் அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தேன் . கானல் நீரால் ஒருபோதும் தாகத்தைத் தணிக்க முடியாதபோது அது ஓர் உலக உண்மை ஆகிவிடுகிறது. அதற்குப் பதில் தாகத்தைச் சிறிதளவேனும் தணிக்கக் கூடிய ஒன்றைப் பயன்படுத்தி இருக்கலாம். உதாரணத்திற்கு மனைவியை ஆற்றுடனும் தோழியை சமுதிரத்துடனும். ஆனால் நான் குறிப்பிட்டிருக்கும் முரண்பாடு ஒரு கவித்துவத்தைக் கொடுக்கும். இல்பொருள் உவமை அணி போல், கவிதைக்குப் பொய் அழகு என்பதுபோல்.

      A poetic lie adds more beauty to a poem than a universal truth 🙂

       
  4. vinothkumar

    November 12, 2011 at 11:30 pm

    i too have heard tis song multiple times… but never got tis doubt… i think am still in crawling stage…

     
    • Kaarthik Arul

      November 19, 2011 at 8:33 pm

      Vinoth, ரொம்ப வெட்டியா இருக்கறதால இப்படியெல்லாம் யோசிக்கிறேன். நீ எப்பவுமே பிஸி 😉

       

Leave a reply to Aishwarya Govindarajan Cancel reply