RSS

அவள் ஒரு தொடர்கதையும் நானும்

09 Oct

அவள் ஒரு தொடர்கதை – என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம். எனது 12-வது வயதில் பார்த்து பிரமிப்பூட்டி இயக்குனர் ஆகும் ஆசையைத் தூண்டியது. அதுவரை பாலசந்தரின் சின்னத்திரை மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார். அதன்பின் கே.பி.யின் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அப்போது சன் மூவீஸ் சேனல் மிகவும் உதவியாக இருந்தது. 13 வயதைத் தொட்டிருக்கும் என் மாமா பெண் இன்னும் Harry Potter-ஐயும் கார்ட்டூனையும் மட்டுமே பார்க்கிறாள் 😦
அவள் ஒரு தொடர்கதை இரவுக்காட்சி பார்த்துவிட்டு சைக்கிளை திரையரங்கிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து தன் அப்பாவிடம் டோஸ் வாங்கியதாகவும், பின் பாலசந்தரிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் சொன்னார். அதைக் கேட்டதும் என்னைப் போலவே இன்னொருவருக்கும் அதே போன்ற தாக்கம் இருந்திருக்கிறதே என்று என் பிரமிப்பு இரட்டிப்பானது.
எம்.எஸ்.பெருமாளின் மூலக்கதையைக் கொண்டு கே.பி. திரைக்கதை-வசனம் எழுதி இயக்கிய இப்படம்  மலையாளத்தில் Aval oru Thudarukatha (Dubbing), தெலுங்கில் Anthu leni Katha, கன்னடத்தில் Benkiyalli Aralida Hoovu, ஹிந்தியில் Jeevan Dhaara, பெங்காலியில் Kabita என்று பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரித்விக் கட்டக்கின் Meghe Dhaka Tara படத்தின் தழுவல்தான் இப்படம் என்று சொல்லப்பட்டாலும் (நான் இன்னும் பார்க்கவில்லை) பெங்காலியிலும் ரீமேக் ஆனது ஆச்சரியம்.
பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் கமல் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மேலாளர் கதாபாத்திரம், கன்னடத்தில் பஸ் கண்டக்டர் கதாபாத்திரம், பெங்காலியில் அதே விகடகவி கதாபாத்திரம் என்று செய்தவர் ஹிந்தியில் மட்டும் தவற விட்டுவிட்டார். கன்னட அ.ஒ.தொ சுஹாசினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்த இரண்டே படங்களில் ஒன்று. மற்றொன்று Y.Gee.மகேந்திரன்-சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம். சிவாஜி கடவுளாக நடித்தார். ரஜினி, கமல், ஜெயஷங்கர் உள்ளிட்டோர் Cameo Appearance செய்தனர். நல்ல வேளையாக அவள் ஒரு தொடர்கதை படத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லாமல் போனது.
கே.பி.யின் பெண் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கவிதா – நடமாடும் நெருப்புராட்(ச்)சஸி (அடுத்து சிந்து) அண்ணியின் காய்ச்சலுக்கு மருந்து வாங்க பணம் கொடுக்காமல் உதட்டுச்சாயம் வாங்க பணம் கொடுத்தனுப்புவது செயற்கையான, சினிமாத்தனமான குணாதிசயம் என்றாலும் அவளது திமிர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை சுஜாதா அனாயாசமாக செய்திருப்பார். அவர் வாழ்நாள் முழுவதற்கும் இந்தப் படமே போதும். ஜெயப்ரதாவுக்கும், மாலா சின்ஹாவுக்கும் சுஜாதா அளவுக்கு திமிரும் மிடுக்கும் இல்லை. தெலுங்கில் மூர்த்தியாக ரஜினி கலக்கியிருப்பார் 🙂 கன்னடத்திலும் ஹிந்தியிலும் பார்த்ததில்லை. சுஹாசினியும் ரேகாவும் திறமையான நடிகைகள் என்றாலும் சுஜாதா அளவுக்குச் செய்திருப்பார்களா என்று பார்க்க வேண்டும். CD/DVD பல நாட்களாகத் தேடுகிறேன். பெங்களூருவில் கூட கிடைக்கவில்லை 😦
இன்றைய காலக்கட்டத்திற்கும் Relevant-ஆக இருக்கும் இப்படத்தை ரீமேக் செய்தால் இப்போதுள்ள கதாநாயகியரில் கவிதா கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்? இப்போது இருப்பவர்கள் எல்லாம் எங்கே நடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?. சில நாட்கள் முன்பு வரை என் சாய்ஸ் ஸ்நேஹா, பின் பத்மப்ரியா. இப்போது அனுஷ்கா 😉
Advertisements
 
4 Comments

Posted by on October 9, 2011 in Chummaa, Movies

 

4 responses to “அவள் ஒரு தொடர்கதையும் நானும்

 1. Aravindan

  October 10, 2011 at 6:53 am

  ’மேகே தாகே தாரா’ அ.ஒ.தொ-வின் ’கலைப்பட’ச் சகோதரி போல. மென்மையான நாயகி அதே கதைகளத்தில் உலவிக்கொண்டிருப்பாள் – அவ்வப்போது கொஞ்சம் வெறித்துப் பார்ப்பாள். (தமிழில் பீம்சிங் அ.ஒ.தொ எடுத்திருந்தால், எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது. கட்டக் பெரிதும் மதிக்கப்படும் இயக்குனர் என்றாலும், எனக்கு அப்படத்தில் தனித்துவமாக ஏதும் தெரியவில்லை, இல்லை அதை உள்வாங்கும் திறனில்லை). அ.ஒ.தொ நாயகியின் அழகே, என்னைப் பொறுத்தவரையில், தேள் போல கொட்டும் தன்மை – வெளிப்படுவது விஷமோ தேனோ. மே.தா.தா நாயகி அழுகையை மென்று தின்னும் பெண்ணாக மட்டும் வெளிப்படுவாள். படம் என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சில இசைத்துணுக்குகள் மட்டும் சுவாரசியமாக இருந்தன.

   
 2. Kaarthik Arul

  October 10, 2011 at 12:32 pm

  ஆம் அரவிந்த், பலரும் வெறுக்கக் கூடிய குணத்தை ரசிக்கவைத்தது கே.பி.யின் மேஜிக். அமுதம் பாதி அமிலம் பாதி.

  மே.தா.தா. பார்த்தால் அ.ஒ.தொ.வின் மீதுள்ள ஒருவித ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்று தரவிறக்கியும் இன்னும் பார்க்காமல் இருக்கிறேன். பார்த்து விடுகிறேன். நன்றி!

   
 3. samudra

  October 19, 2011 at 7:27 pm

  let me know ur email id

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: