RSS

போறானே போறானே – வாகை சூடவா

13 Jul

சமீபத்தில் வந்த பலரும் நன்றாக இருப்பதாக சொன்ன ‘வாகை சூடவா’ பாடல்களை வார இறுதியில் தரவிறக்கி வைத்திருந்தேன். இன்றுதான் கேட்க முடிந்தது. களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கும் இப்படத்தில் மீண்டும் விமல்தான் நாயகன். களவாணி என்னை வெகுவாகக் கவராததால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால் 70களில் நடப்பதுபோல் கதை கொண்ட இந்த பீரியட் படத்தின் ஸ்டில்களை விகடனில் பார்த்தபோது ‘அட’ போட வைத்தன.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ஜிப்ரான் என்பவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. கேட்டவுடனே இரண்டு பாடல்கள் மிகவும் ஈர்த்துவிட்டன. ஒன்று சின்மயி பாடி ‘சாரக் காத்து’. இன்னொன்று நேஹா பசின் மற்றும் ரஞ்சித் பாடிய ‘போறானே போறானே’.
இரண்டாவது பாடலை மாலையிலிருந்து இப்போதுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வசீகரிக்கும் வாஸந்தி ராகத்தில் அமைந்த இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது இசை, வைரமுத்துவின் வைடூரிய வரிகள் மற்றும் நேஹா பசினின் மண் மணம் கமழும் குரல். ‘சத்தம் போடாதே’ படத்தில் அவர் பாடிய ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாடல் மிகவும் பிடித்திருந்தாலும் இதுபோன்ற ஒரு கிராமியப் பாடலை Nativity சிறிதும் சிதைக்காமல் பாடியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. சில இடங்களில் ஹிந்தி பாடகி ரேகா பரத்வாஜை நினைவு படுத்துகிறார். புதிய இசையமைப்பாளர் ஜிப்ரான் ‘வாகை சூடவா’ மூலம் தமிழ்த்திரை இசையில் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் 🙂

வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று அந்தப் பாடல் வரிகளை இங்கு பகிர்கிறேன்.

Lyrics Courtesy http://www.dhool.com

போறானே…போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே…போறாளே
போறாளே…போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே…போறானே…போறானே

காத்தோட தூத்தல போல போறானே,

மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட

டீத்தூளு வாசம் கொண்ட மோசக்காரா

ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட

மூக்கணாங்கவுறப் போல உன் நெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

உன்னை பாத்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

போன்ற வரிகளை வெகுவாக ரசித்தேன்!

Advertisements
 
7 Comments

Posted by on July 13, 2011 in Movies, Music

 

7 responses to “போறானே போறானே – வாகை சூடவா

 1. தமிழ் மதி

  July 14, 2011 at 5:58 pm

  இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா அவர்கள்………

   
  • Kaarthik Arul

   July 15, 2011 at 12:01 am

   @தமிழ் மதி, தகவலுக்கு மிக்க நன்றி, இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா என்று இன்றுதான் தெரிந்தது. தவறுக்கு வருந்துகிறேன். வேறு மூன்று பாடல்களை வைரமுத்து எழுதியிருப்பதால் இதையும் நிச்சயம் அவர்தான் எழுதி இருப்பார் என்று நினைத்துவிட்டேன். இளம் கவிஞரின் வரிகள் போல் தெரியவில்லை. அற்புதமாக எழுதி இருக்கிறார். Hats off to him!

    
 2. Velan

  July 15, 2011 at 9:35 am

  Kettukite iruken oru vaarama.. great song.

   
  • Kaarthik Arul

   July 27, 2011 at 7:19 pm

   So addictive 🙂

    
 3. SURESH

  September 30, 2011 at 9:48 pm

  கார்த்திக் நேத்தா ஒரு அருமையான படைப்பாளி அவரால் இன்னும் சாதிக்க தமிழ் சினிமா போதாத களம் …………

   
 4. Willy Trex

  November 1, 2011 at 5:44 pm

  thank for the lyric, i been looking for this song lyric in tamil for quite some times, as i intend to translate this song into chinese, stay tune on you tube, this is a fantastic song, with a rhythm and lyric that move me, althought my tamil is ot good enough at the moment

   
 5. Willy Trex

  November 1, 2011 at 6:35 pm

  by the way, is that possible , can you provide me an english version lyric for this song?

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: