RSS

சுஜாதா- சில்லென்ற காலைப்பனி

31 Mar

Sujatha's pic from A.R.Rahman Foundation Calender

 
பெயர் ராசியோ என்னவோ எனக்கு மிகப் பிடித்த பாடகிகளில் ஒருவர். புது வெள்ளை மழையிலிருந்து இவரது குரலுக்குத் தீவிர ரசிகன். சித்ரா இவரை விட சிறந்த பாடகி. ஆனால் சுஜாதாவை அதிகம் பிடிக்கக் காரணம் பள்ளிப் பருவதில் என் Dream Girlன் குரல் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்த குரலுக்கு மிகவும் நெருக்கமான குரல் இவருடையது. தற்போதைய Dream Girlன் சாரீரம் மட்டுமில்லாது சரீரத்தையும் கொண்டுள்ளார் ஷ்ரேயா கோஷால் 😉 பல நாட்கள் இவரது குரலை சித்ராவினுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (பொதுவாகவே கேரளத்தின் அனேக ஆண் குரல்கள் ஜேசுதாசின் குரலைப் போலவும் பெண் குரல்கள் சித்ராவின் குரல் போலவும் இருக்கும்.) ஆனால் சித்ராவிற்கு முன்பே இளையராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்டவர் சுஜாதா. 10-12 வயது சிறுமியாக கவிக்குயில் படத்தின் ‘காதல் ஓவியம் கண்டேன்’ பாடல் மூலம் அறிமுகம் ஆகியிருந்தாலும் அப்பாடல் படத்தில் இடம் பெறாததால் ‘காயத்ரி’ திரைப்படத்தில் ‘காலைப் பனியில்’ பாடல் வெளிவந்து ஹிட் ஆனது. மீண்டும் ஸ்ரீதேவிக்கு ஜானியில் ‘ஒரு இனிய மனது பாடலை’ மிகவும் இனிமையாகப் பாடினார். இப்போதும் பலர் அப்பாடலைப் பாடியது ஜென்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இளமைக் கோலம் படத்தில் மலேசியா வாசுதேவனோடு ‘நீ இல்லாத போது’ என்ற டூயட்டுக்குப் பிறகு 80களில் தமிழில் வேறு பாடல் பாடியதாக தெரியவில்லை.

ஆனால் இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது ரோஜா. அதற்குள் சித்ரா  தென்னிந்திய இசை சாம்ராஜ்யத்தின் இளவரசி ஆகியிருந்தார். ‘புது வெள்ளை மழை’ சுஜாதாவுக்கு மட்டுமின்றி உடன் பாடிய உன்னி மேனனுக்கும் ரீஎன்ட்ரி. காதல் ரோஜாவே பாடலில் வரும் ‘ல ல ல ல ல ல ல ல லா’ ஹம்மிங் அத்தனை இதம்.  புது வெள்ளை மழை போன்ற ஒரு அற்புதப் பாடலை இசையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்ராவைப் பாட வைக்காமல், புதியவரான ரஹ்மான் ஏன் சுஜாதாவிற்குக் கொடுத்தார் என்று  பலமுறை நினைத்திருக்கிறேன். அவரது குரலில் அதிகாலைப் பனித்துளியைப் போன்ற ஒருவித குளிர்ச்சி உண்டு. அவர் பாடினால் தீப்பொறிகூட சில்லென்று ஆகிவிடும்.

 
 தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பல அருமையான பாடல்களை அவருக்குக் கொடுத்தார். நேற்று இல்லாத மாற்றம், ஆத்தங்கரை மரமே, போறாளே பொன்னுத்தாயி, நாளை உலகம் இல்லையென்றால் போன்ற பல பாடல்களுக்குப் பின்தான் சுஜாதா என்றவரைத் தெரிந்தது. அப்போது அம்மா சொன்னார் இவர் சிறுமியாக ஜேசுதாசுடன் பல கச்சேரிகளில் பாடியவர் என்று. இன்று போல் தொண்ணூறுகளில் ரியாலிட்டி ஷோக்கள் இல்லை. ஏ.வி. ரமணனின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில்தான் சுஜாதாவை முதன் முதலில் பார்த்தேன். சித்ரா பாடியது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களைப் பாடினார். அதன் பின் ராஜ் டிவியில் பி.எச்.அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கிய பாடகர்களின் நேர்காணல் நிகழ்ச்சியில் வந்தார். அவர் பாடலைக் கேட்பது இனிமை என்றால், பார்ப்பது இனிமையிலும் இனிமை. பொதுவாகவே சில பாடகர்கள் பாடுவதைப் பார்க்க சகிக்காது. ஆனால் காதுகளில் விரலை  வைக்காமல், கண்களைச் சுருக்காமல் மிக இயல்பாக உச்ச ஸ்தாயியில் மனதைக் கொள்ளைக் கொள்ளும் புன்னகையுடன் சுஜாதா பாடல்களை மிகவும் ரசித்துப் பாடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். திரு..மோகன் மிகவும் கொடுத்து வைத்தவர்.

காதலன் படத்தில் வரும் சிறு பாடலான ‘காற்றுக் குதிரையிலே’ பாட்டுக்கு உயிரையே தரலாம். என் வீட்டுத் தோட்டத்தில், சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால், சந்திரனைத் தொட்டது யார், பூ பூக்கும் ஓசை, பூவுக்குள் ஒளிந்திருக்கும், மெல்லிசையே, அதிசயம், முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் என்று பல பாடல்களைப் பாடினாலும் இளையராஜாவின் இசையில் ‘ஒரு பட்டாம்பூச்சி’ பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அப்பாடல் முதல் அவரது குரலை அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தேன். பிறகு நினைத்த வரம் கேட்டு, காதல் நீதானா, மஞ்சள் பூசும் வானம் தொட்டு என்று ராஜாவுடன் மீண்டும் இணைந்தார்.  கார்த்திக் ராஜாவின் இசையில் கவிதைகள் சொல்லவா, தேசிங்கு ராஜா, காதல் வானொலி யுவன் ஷங்கர் ராஜா இசையில் இரவா பகலா, நெஞ்சோடு கலந்திடு, தீண்டித் தீண்டி; வித்யாசாகர் இசையில் உன் சமையல் அறையில், ஒ நண்பனே, தித்திக்குதே, அழகூரில் பூத்தவளே, ஆசை ஆசை, காற்றின் மொழி, etc அழகிய ராவணன் (மலையாளம்) படத்தில் ‘ப்ரனயமணித் தூவல் பொழியும் பவிழமழா’, பிரணயவர்ணங்கள் படத்தில் வரும் ‘வரமஞ்சள் ஆடிய ராவின்ட மாரில்’, Summer in Bethlehem படத்தில் எத்ரையோ ஜென்மமாய் போன்ற பாடல்கள் என் All Time Favourites. அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களிடமும் பாடியுள்ள இவர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் எனக்குத் தெரிந்து ரங்கோலா (கஜினி) பாடல் மட்டுமே பாடியுள்ளார்.  சமீபத்தில் இவர் ரஹ்மானுக்குப் பாடி அதிகம் கவனிக்கப் படாமல் போன அருமையான பாடல்கள் ‘நெஞ்சம் எல்லாம் காதல்’ மற்றும் குரு படத்தில் வரும் ‘ஏ மாண்புறு மங்கையே…’ 
 
கிரீடம் படத்தில் வரும் விழியில் பாடலை சுஜாதா பாடியது என்று பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் தெரிந்தது அப்பாடலைப் பாடியது அவர் மகள் ஷ்வேதா என்று. குரல் மட்டுமின்றி உருவமும் தன் அம்மாவின் அச்சு அசல். ஆனாலும் ஷ்வேதாவைவிட சுஜாதா அழகு 😉 ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக, போட்டியாளர்கள் மனதைப் புண்படுத்தாமல் மலையாளம் கலந்த தமிழில் அவர் சொல்லும் கமெண்ட்டுகளுக்காகவே விரும்பிப் பார்ப்பேன். எஸ்.பி.பி போல் இவர் குரலுக்கும் இன்னும் வயதாகவில்லை. சமீபத்தில் ஆடுகளம் படத்தில் வந்த ‘அய்யய்யோ’ பாடலில் எஸ்.பி.பி மற்று எஸ்.பி.சரண் இருவரையும் இணைந்து பாடவைத்துபோல், பிரஷந்தினிக்கு பதில் சுஜாதாவையும் ஷ்வேதாவையும் இணைந்து பாட வைத்திருக்கலாம். ஸ்ரீனிவாசுடனும்   உன்னி கிருஷ்ணனுடனும் சுஜாதா பாடும் டூயட் பாடல்கள் மிகவும் பிடிக்கும். எஸ்.பி.பி. போல சுஜாதாவின் குரலும் வயதாகாமல் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுகிறேன். Happy Birthday Sujatha chechi 🙂

 

Time Pass: பீகி பீகி ராத்தொன் மேன் என்ற கிஷோர் குமார்-லதாமங்கேஷகர் பாடிய ஆர்.டி.பர்மனின் அருமையான பாடலின் ரீமிக்ஸில் சுஜாதாவும் ஸ்ரீநிவாசும் பாடியது

 
பிற்சேர்க்கை: எழுத்தாளர் சுஜாதாவிற்கும் பாடகி சுஜாதாவிற்கும் உள்ள ஒற்றுமைகள். இருவருக்கும் முதல் திரைப்படம் காயத்ரி. பாடகி சுஜாதாவின் ரீ எண்ட்ரியான ரோஜாவில் எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதினார். ஒருவகையில் அவருக்கும் விக்ரம் படத்திற்குப் பிறகு ரோஜா ஒரு ரீ எண்ட்ரிதான். எழுத்தாளர் சுஜாதாவின் கடைசிப் படமான எந்திரனில் சுஜாதா பாடவில்லை என்றாலும் ஷ்வேதா பாடியுள்ளார். ரூம் போட்டு யோசிச்சது 🙂 
 
7 Comments

Posted by on March 31, 2011 in Birthdays, Filmy Freak, Music, Sujatha

 

7 responses to “சுஜாதா- சில்லென்ற காலைப்பனி

 1. Madhan

  March 31, 2011 at 7:25 am

  எனக்கும் அபிமான பாடகி… கேட்பது போலவே இவர் பாடி பார்ப்பதுவும் அழகு என்பது முற்றிலும் உண்மை. நெஞ்சம் எல்லாம் எனது All time favorite. 🙂

   
  • Kaarthik Arul

   March 31, 2011 at 3:51 pm

   மதன், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. சுஜாதா ஒரு அற்புதமான பாடகி. ஏனோ ஒரு பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போயிற்று. ஜானிக்குப் பிறகு தொடர்ந்திருந்தால் ஒருவேளை கிடைத்திருக்கலாம்.

    
 2. aravind

  April 11, 2011 at 4:24 am

  நல்ல பதிவு. சுஜாதாவின் குரலில் அத்தனை ஈர்ப்பில்லை. ஆனாலும் அவரின் குரலை மற்றவர்கள் ரசிப்பதை ரசிப்பதுண்டு. (அந்த இருவரும் மேலே கமெண்ட் போட்டிருக்கிறார்கள் 😉 )

  ராஜாவின் இசையில் அவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘டைம்’இல் வருகிற ‘நிறம் பிரித்து பார்த்தேன்’. இதுவரை கேட்டதில்லையெனில் கேட்டுப் பார்க்கவும். ‘நினைத்த வரம் கேட்டு’ அவரின் குரலில்லை என்று நினைக்கிறேன்.

   
 3. Kaarthik Arul

  April 13, 2011 at 1:33 pm

  @Aravind, ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ பாடலை இத்தனை நாள் எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை. மிக்க நன்றி. Loop-ல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் மிகவும் ரசித்த “I’ve been waiting for the Moonlight” (Jhootha Hi Sahi) பாடலில் இதன் சாயல் இருக்கிறது.

  ‘நினைத்த வரம் கேட்டு’ பாடலைப் பாடியது சுனிதா சாரதி (!). ஏனோ இதுநாள் வரை சுஜாதா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

   
 4. Ramanan S

  May 19, 2011 at 2:08 pm

  Thanks for educating me :)… Just downloaded “காற்றுக் குதிரையிலே”.. Il be the happiest if u can pen down all the best-but-unnoticed tamil songs.. 🙂 Bit songs & Theme musics too 🙂

   
  • Kaarthik Arul

   May 19, 2011 at 2:44 pm

   @Ramanan, thanks for visiting my blog and dropping comment. I too have the idea of mentioning the bit songs and Theme Music I like. Will do that 🙂

   I forgot to mention a beautiful song of Sujatha with Maestro – thOL mEla thOL mEla from the film ‘Poomani’.

    
 5. Ramanan S

  May 19, 2011 at 6:10 pm

  You Must. see again just listening to “Uyirum neeye” .Thanks to Twitter n U 🙂

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: