RSS

சில கேள்விகள்

25 Mar

நண்பர் அரவிந்தனின் வலைப்பூவில் பார்த்தது (சுட்டது).  நான்கு வருடங்களுக்கு முன் அவருக்குக் கேட்கப்பட்ட கேள்விகள். கொஞ்சம் எடிட் செய்து என் நண்பர்களுக்குக் கொடுத்தேன். பாலாவும் ஐஸ்வர்யாவும் பதிவிட்டிருந்தனர். நன்றி ஹை 🙂 இப்போது என் முறை.

எனக்கு பிடித்தவை சில….

பிடித்த நிறம் : லாவெண்டர் (In general, shades of violet)

பிடித்த உணவு : செட்டிநாடு, பஞ்சாபி, முகலாய், கொங்கன், மால்வாணி, மார்வாடி வகை உணவுகள் மிகவும் பிடிக்கும். தோசையும் ரசம் சாதமும் மட்டும் இருந்தாலே போதுமானது.

பிடித்த மாதம் : பிறந்த மாதம் என்பதால் ஜூன், காதலர் தினம் வருவதாலும் குறைந்த நாட்களில் சம்பளம் கிட்டும் பிப்ரவரி, சென்னையில் இருந்தால் டிசம்பர் (சங்கீதக் கச்சேரி, சர்வதேச திரைப்பட விழா, புத்தக வெளியீட்டு விழா போன்றவை நடப்பதால்)

பிடித்த பாடல் : இடம் பத்தாது. சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் ‘கண்டேன்’ மற்றும் ‘எங்கேயும் காதல்’ படப் பாடல்கள் அனைத்தும் பிடித்திருக்கின்றன. குறிப்பாக “ஒரு பார்வை ஒரு வார்த்தை”.

பிடித்த படம்: இதற்கும் இடம் பத்தாது. இந்த வருடம் வெளிவந்த படங்களில் மிகவும் பிடித்தது ஆடுகளம் . அதையடுத்து யுத்தம் செய் மற்றும் பயணம்.

பிடித்த விளையாட்டு: விளையாட்டே பிடிக்காது. எப்போதாவது சதுரங்கம் (Chess)

பிடித்த பருவம்(சீசன்): என்றென்றும் வசந்தம் (அலுவலகம் இன்றி வீட்டில் இருந்தால் மட்டும் மழைக்காலம்)

பிடித்த வார நாள்: வெள்ளி மாலை முதல் ஞாயிறு மாலை வரை குறிப்பாக சனிக்கிழமை இரவு.

பிடித்த ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்: சாக்லேட், பட்டர் ஸ்காட்ச்.

பிடித்த பொழுது: நடுநிசி, பின்னிரவு 

பிடித்த அயல்நாட்டு நடிகர்: Tom Hanks, Leonardo Dicaprio.

தற்போதைய….

மனநிலை: சென்னையிலிருந்து பெங்களூர் வந்து 15 நாட்கள் ஆகியும் ஓர் அந்நியத்தன்மையுடன் இருக்கிறது. மனம் இன்னும் சென்னையிலேயே இருக்கிறது. Missing Chennai 😦

உடை: Lee Cooper T-Shirt & Jockey Boxer Shorts (நாட்டுக்கு ரொம்ப  அவசியம் என்று சொல்வது கேட்கிறது :-))

கணிணியின் முகப்பு: புதிய அலுவலகத்தின் லோகோ. மாற்ற வேண்டும். பழைய மடிக்கணினியில் நெடுநாட்களாக இருந்தது ஆலப்புழையில்  ஜெஸ்ஸியின் வீட்டில், தன் திருமணம் நின்ற இரவில், கார்த்திக் அவளது கையை இறுகப் பற்றியிருப்பது போன்ற ஒரு படம்.

சூழல் : ஊரே கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் தனியறையில் இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். ஐ பாடில் ‘மழை வரும் அறிகுறி’ (வெப்பம்).

எண்ணம் : நாளை சென்னையில் ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்குப் போகமுடியாததை எண்ணி வருத்தம் 😦

ரிங் டோன் : எங்கேயும் காதல் பாடலின் முதலிசை.

காலர் ட்யூன் : ‘ஜோதேயல்லி என்ற இளையராஜாவின் கன்னடப் பாடல் (நூறாவது நாள் படத்தில் வரும் விழியிலே பாடலை முதலில் கன்னடத்திற்குத் தந்திருந்தார் ராஜா) பெங்களூர் வரும் முன்பே தீர்மானிக்கப்பட்ட காலர் ட்யூன்

ஐந்து “முதல்”கள்….

முதல் நெருங்கிய தோழன் : மயில்வாகனன். பால்ய காலத்து நண்பன். பத்து வயதில் வீடு மாறியதால் பிரிந்துவிட்டோம். இப்போது எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை.

முதல் நெருங்கிய தோழி : நான்காம் வகுப்பு வரை உடன் படித்த பூர்ணிமா. இப்போது ஒரு குடும்ப இஸ்திரி ஆகியிருப்பார்.

முதல் காதல் மலர்ந்த வயது : நான் பிறந்த அன்று என் பக்கத்துத் தொட்டிலில் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு பெயர்கூட வைத்திருக்க மாட்டார்கள் 😉

முதல் செல்லப்பிராணி : தீபூ, என் உடன்பிறப்பு 😉

நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் : நான் அடிமை இல்லை

ஆறு “கடைசி”கள்…

கடைசி சிகரெட் : சிறுவயதில் அப்பாவின் சட்டைப்பையில் இருந்து விழுந்த சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு இழு இழுத்து இனி வாழ்நாளில் சிகரெட் பிடிப்பதில்லை என்று தீர்மானித்தேன்

குடித்த திரவம் : தர்பூசணி ஜூஸ்

கார் பயணம் : மார்ச் 6 2011 அன்று நண்பர்களுடன் ‘பயணம்’ படம் பார்க்கச் சென்றது.

பார்த்த படம் : திரையரங்கில் பயணம் (உலகக் கோப்பை தலைவலியால் புதுப்பட வெளியீடுகளைத் தள்ளிப்போட்டுவிட்டனர். மிகவும் நொந்து போயுள்ளேன் :-(), தொலைக்கட்சியில் கன்னத்தில் முத்தமிட்டால் (நல்லவேளை அன்று மேட்ச் இல்லை :-))

தொலைபேசி உரையாடல் : சற்று முன் வந்த ராங் நம்பர் (சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு பெண்!)

படித்த புத்தகம் : நாஞ்சில் நாடனின் ‘மிதவை’.

நீங்கள் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறார்களா? – பலமுறை. ஆனால் அது சட்ட மீறல் என்பது பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், திருட்டு வி.சி.டி.யில் படங்கள் பார்த்தது, ப்ளாக்கில் டிக்கட் வாங்கிப் படம் பார்ப்பது, போலி மருந்துச் சீட்டுகள் மற்றும் வீட்டு வாடகை ரசீதுகளைச் சமர்ப்பித்து வருமான வரி சேமிப்பது, இப்படிப் பல.

நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? – பலர் கண்களால் கைது செய்யப்பட்டு சிலர் இதயங்களில் சிறை வைக்கப்பட்டும் இருக்கிறேன் 😉

நீங்கள் எப்போதாவது டீவியில் வந்ததுண்டா? – “பலமுறை. Off செய்யப்பட்ட டீவியின் முன் சென்று நிற்கும் போதெல்லாம் அதில் வந்துள்ளேன்” என்ற அரவிந்தனின் பதிலை CTRL+C செய்துகொள்கிறேன் அவர் சம்மதமில்லாமலே 🙂

நீங்கள் எப்போதாவது பொய் சொன்னது உண்டா? – எப்போதாவது உண்மை சொல்வதுண்டு 🙂

நீங்கள் முன்பின் தெரியாத பெண்ணிற்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா? – பலமுறை – கனவுகளில் 

இன்று செய்த ஆறு செயல்கள் : அலுவலகம் சென்று கொஞ்சம் வேலை செய்தேன், மதியம் நாகார்ஜுனா சாகரில் ஆந்திரா நான்-வெஜ் மீல்ஸ் ஒரு பிடி பிடித்தேன், ஐ-பாடில் புதிய பாடல்களைச் சேர்த்தேன், விகடன் வாங்க இரு கடைகளுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன், அசோகமித்திரனின் ’78’ என்ற சிறுகதையை வாசித்தேன்.

நீங்கள் இன்று சென்ற ஐந்து இடங்கள் : அலுவலகம், நாகார்ஜுனா சாகர் உணவகம், காபி அருந்த சிவசக்தி ஃபுட்ஸ், விகடன் வாங்க பி.டி.எம். லே அவுட், இரவு சாப்பிட சூரியா மெஸ்.

இப்போது காதால் கேட்கும் நான்கு ஒலிகள் : (இயர் ஃபோனை எடுத்துவிட்டு) அறையில் நண்பர்கள் டிவி சேனல்கள் மாற்றிக்கொண்டிருக்கும் ஒலி, மின்விசிறி சுழலும் ஒலி, மடிக்கணினியில் இதைத் தட்டச்சும்போது எழும் ஒலி, மேல் வீட்டில் எதையோ உருட்டும் ஒலி.

நீங்கள் சொல்லத்தோன்றியதை தயங்காமல் எந்த மூன்று பேரிடம் சொல்வீர்கள்: என்னிடம், கண்ணாடியிடம், இயற்கையிடம்

போரடிக்கும் போது செய்யும் இரண்டு செயல்கள் : இசை, இணையம் – அதிக நேரம் இவற்றுடன் இருந்து கொஞ்சம் போரடித்தால் டிவி பார்ப்பேன், நண்பர்களுடன் ஃபோனில் மொக்கை போடுவேன். (படம் பார்க்கவும், புத்தகம் வாசிக்கவும் தக்க ஒரு நேரத்திற்காக காத்திருப்பேன்)

இறப்பதற்குள் செய்ய விரும்பும் ஒரு காரியம் : ஒரு திரைப்படமாவது இயக்குவது (வெளிவரவில்லை என்றாலும் பரவாயில்லை :-))

Advertisements
 
2 Comments

Posted by on March 25, 2011 in Chummaa

 

2 responses to “சில கேள்விகள்

 1. kannusamy

  March 26, 2011 at 8:07 pm

  Dear Karthi ur sense of humour admiring me . I WISH U ALL THE BEST.

   
  • Kaarthik Arul

   March 27, 2011 at 11:41 pm

   Hi Uncle, Welcome to my Blog. Thanks a lot for ur comments 🙂

    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: