RSS

சென்னை புத்தகக் காட்சி – 2011

31 Jan

சென்னை புத்தகக் காட்சி முடிந்து பல நாட்கள் ஆன பிறகு இதைப் பதிவிடுகிறேன். Draft-ல் இருந்த பதிவு இது.

சென்னையில் நடந்த 34வது புத்தகக் காட்சி எனக்கு முதல் முறை. சில வருடங்களாக விட்டுப் போயிருந்த வாசிப்புப் பழக்கம் சென்ற ஆண்டு மீண்டும் எட்டிப் பார்த்தது. புத்தகக் காட்சி என்பதைவிட புத்தகத் திருவிழா என்பதே சரி. இப்போது பல புத்தகங்களை புத்தகக் காட்சி அன்றி சில கடைகளிகேயே கிடைக்கின்றன. ஆனால் லட்சக் கனன்க்கான புத்தகங்களை ஓரிடத்தில் ஒருசேர பல வாசகர்கள் மற்றும் சில எழுத்தாளர்களுடன் பார்ப்பது புத்தக விரும்பிகளுக்கு (பார்த்தாலே) பரவசத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. முதல் வார இறுதியிலும் இரண்டாம் சனிக்கிழமையன்றும் சென்று புத்தகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தேன். ஏற்கனவே வாங்கிய பல புத்தகங்களை முழுவதும் படிக்காமல் இருந்தபோதும் மேலும் பல புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். புத்தகங்களின் பட்டியல்:

கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா
விஞ்ஞானச் சிறுகதைகள் – சுஜாதா
குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
வண்ணத்துப்பூச்சி வேட்டை – சுஜாதா
அனிதா இளம் மனைவி – சுஜாதா
எதையும் ஒரு முறை – சுஜாதா
வைரங்கள் – சுஜாதா

உலக சினிமா – எஸ். ராமகிருஷ்ணன்
இலைகளை வியக்கும் மரம் – எஸ். ராமகிருஷ்ணன்
நகுலன் வீட்டில் யாரும் இல்லை – எஸ். ராமகிருஷ்ணன்

எழுதும் கலை – ஜெயமோகன்
சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன்
ஆயிரம் கால் மண்டபம் – ஜெயமோகன்
இரவு – ஜெயமோகன்
அனல் காற்று – ஜெயமோகன்
விசும்பு – ஜெயமோகன்
உலோகம் – ஜெயமோகன்
மண் – ஜெயமோகன்

சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன்
சதுரங்க குதிரை – நாஞ்சில் நாடன்
மிதவை – நாஞ்சில் நாடன்

ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி
ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் – சுந்தர ராமசாமி

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்

நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

அபிதா – லா.ச.ரா
உயிர் – அசோகமித்திரன்
இரவுக்குப் பின் வருவது மாலை – ஆதவன்
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
ஒளியிலே தெரிவது – வண்ணதாசன்
சாவி சிறுகதைகள்
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது – சிவசங்கரி
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – வாஸந்தி
எம் தமிழர் செய்த படம் – தியடோர் பாஸ்கரன்
சந்திரயான் – சரவண கார்த்திகேயன்
உள்ளுக்குள் ஓடும் ஆறு – வெ.இன்சுவை (அம்மாவின் பள்ளித் தோழி)

வைரமுத்து கவிதைத் தொகுப்பு
தினத்தந்தி சுவடுகள்

பாலுமகேந்திரா கதை நேரம் டிவிடி – பாகம் 1 & 2
நாதஸ்வரம் – ஆவணப் படம் டிவிடி – ஜே.டி.ஜெர்ரி

முத்துக்கள் பத்து என்று பிரபல எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகளை சிறிய புத்தகங்களாக தொகுத்து வழங்கியுள்ளது அம்ருதா பதிப்பகம். அருமையான தொகுப்பு. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், ஆதவன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரது சிறுகதைகள் தொகுக்கப் பட்ட புத்தகங்களை வாங்கினேன்.

புத்தகக் காட்சிக்கு செல்லும் முன் பட்டியலிட்ட முதல் மூன்று புத்தகங்கள் கிடைக்கவே இல்லை. எஸ்.ரா.வின் உறுபசி, ஆதவன் சிறுகதைத் தொகுப்பு, இரா.முருகனின் ரெட்டைத் தெரு. அடுத்த புத்தகக் காட்சி வரை இம்மூன்று புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன். இவைகளைப் படிக்கவே இரண்டு வருடங்களாகும் போலிருக்கு 🙂

எல்லோரும் பரிந்துரை செய்த லிச்சி ஜூஸை ஒவ்வொரு நாளும் இரு முரோய் பருகினேன். அருமையாக இருந்தது.

 
6 Comments

Posted by on January 31, 2011 in Books

 

6 responses to “சென்னை புத்தகக் காட்சி – 2011

 1. Bala

  February 1, 2011 at 5:55 pm

  Dai… Intha list konjam toooooooo much-ah theriyala unaku?!?!?

   
  • Kaarthik Arul

   February 1, 2011 at 7:25 pm

   Enna panradhu? Oru aarvak kolaarula vaangitten 🙂

    
 2. Mahesh

  February 1, 2011 at 7:17 pm

  Seems like you can keep a lending library which the books you bought.

  Great Going.

  Best Luck to finish the majority of stuffs before next fair.

   
  • Kaarthik Arul

   February 1, 2011 at 7:27 pm

   Thanks Mahesh. Yeah I like to have a library with some of the best works. I too hope to read at least 75% of them by next Book Fair 🙂

    
 3. aravind

  February 5, 2011 at 6:20 am

  முத்துக்கள் பத்து பெரும்பாலும் சிறப்பான தொகுப்பாகவே இருக்கும்.

  லிச்சி ஜூஸ் எப்போதுமே சிறப்பாக இருக்கும். 🙂

   
  • Kaarthik Arul

   February 10, 2011 at 10:48 pm

   நன்றாகவே இருந்தது. பயணங்களில் எடுத்துச் செல்ல ஏதுவாக பாகெட் நாவல் அளவில் உள்ளதே சிறப்பு. ஆதவன் தொகுப்பில் மட்டும் எல்லாக் கதைகளையும் படித்தேன். புகைச்சல் மிகவும் பிடித்திருந்தது. முதலில் இரவு வரும் இன்னொரு முறை படிக்க வேண்டும். லதாமகன் பரிந்துரைத்து இரண்டாம் நாள் சா. கந்தசாமியின் தொகுப்பை வாங்கினேன். ஜெயகாந்தனுடைய ‘லவ் பண்ணுங்கோ சார்’ கண்களில் கண்ணீர் வரவிதுவிட்டது. மற்றவை இன்னும் படிக்கவில்லை.

    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: