RSS

எந்திரன்

02 Oct

‘ஹாலிவுட் படங்களுக்கு நிகராக’ என்று இந்திய இயக்குனர்கள் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்த நமக்கு உண்மையிலேயே அப்படி ஒரு படம் வெளிவந்து விட்டது. அதுவும் ஒரு தமிழ் படம், டிக்கெட் விற்பனையில் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் பெருமையோடு காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம். இந்த எந்திரன் என்பவன் இந்திய சினிமா படைப்புகளின் உச்சம். இப்படி ஒரு படைப்பை உருவாக்கியதற்கு ஷங்கருக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு Royal Salute.

நான் ரஜினி  ரசிகன் அல்லன். அனால் இப்போது ரசிகன் ஆகிவிட்டேன். ஸ்டைல் மற்றும்  சண்டைக் காட்சிகளை விட தேர்ந்த நடிப்பைத்தான் ஒரு நடிகரிடம் விரும்புவேன். அவ்வகையில் நான் தீவிர கமல் ரசிகன், இல்லை வெறியன். ரஜினியை எனக்கு வில்லனாக மிகவும் பிடிக்கும். அவர்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற படங்களில் அவரது நடிப்பை மிகவும் ரசித்துள்ளேன். அவரது நகைச்சுவையும் பிரமிக்கத் தக்கது. தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும், நெற்றிக்கண் போன்றவை சாட்சி. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவரை நன்றாக mould செய்து வைத்திருந்தார். பிறகு அவர் சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தினுள் நடித்த படங்களை நான் விரும்பியதில்லை. ஒரு நடிகன் தன்னை முழுமையாக எவ்வித குறுக்கீடுமின்றி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ரஜினி கடைசியாக நடித்தது தளபதி. அதன் பிறகு 19 வருடங்கள் கழித்து எந்திரன். ஆம் இது வழக்கமான ரஜினி படமும் அல்ல, ஊழல் சமூகத்தைத் திருத்தும் வழக்கமான ஷங்கர் படமும் அல்ல. முழுக்க முழுக்க Science Fiction திரைப்படம். இந்திய ரசிகர்களுக்காக ஆங்காங்கே  சில மசாலாக்களைத் தூவியுள்ளனர்.  
 
மனிதனைப் போல் ரோபோக்களை உருவாக்கி, ராணுவத்திற்கு வீரர்களுக்கு பதில் அந்த எந்திரன்களை அனுப்பும் லட்சியம் கொண்ட விஞ்ஞானி வசீகரனாக ரஜினிகாந்த். அவரது வசீகரக் காதலி, மருத்துவக் கல்லூரி மாணவி சனாவாக ஐஸ்வர்யா ராய். அதற்காக முதலில்  ஒரு எந்திரனை (Chitti, the Robot- Speed 1 Tera Hertz, Memory – 1 Zeta Byte) உருவாக்கி மனிதனால் முடியும் அனைத்தையும் program செய்கிறார். தொல்காப்பியம் முதல் தொழில்நுட்பம் வரை அனைத்தையும் அதன் 1 Z B மெமரியில் பதிவு செய்கிறார். அவரது உதவியாளர்களாக சந்தானம் மற்றும் கருணாஸ். வசீகரனின் பேராசிரியர் போரா (டேனி) ரோபோக்களைத் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர். தான் படைத்த ரோபோவைவிட சிட்டி அதிக ஆற்றலைப் பெற்றுள்ளதைக் கண்டு அதனைத் தவறாகப் பயன்படுத்துகிறார். விளைவு சிட்டி அசுரன் போல் உலகையே அழிக்கும் வல்லமை பெறுகிறான். வசீகரன் தன்னை விட பன்மடங்கு ஆற்றல் மிக்க சிட்டியை எப்படி அழிக்கிறார் என்பதை ஷங்கருக்கே உரிய பிரம்மாண்ட பாணியில் காட்சிப் படுத்தி கண்களுக்கு விருந்தளித்து உள்ளார்.
 
ரஜினி ஒரு எந்திரமாகவே மாறியுள்ளார். ஷங்கர் என்ற எஜமானர் இடும் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றியுள்ளார். ரஜினிக்கு 60 வயது என்று யாராவது சொன்னால் யாராலும் நம்ப முடியாதபடி மனிதர் நிறையவே மெனக் கெட்டிருக்கிறார். தான் மட்டுமே  தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன் கமல்ஹாஸனுக்காக உருவாக்கப்பட்ட  இத்திரைப்படத்தில் கமல் நடித்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது என்று நினைக்க வைத்துவிட்டார் ரோபோ ரஜினி. Hats Off Rajnikanth 🙂 More Accolades are on your way 🙂
 ஐஸ்வர்யா ராய் – இவருக்குப் பிறகு எத்தனையோ உலக, பிரபஞ்ச அழகிகள் வந்தாலும் வருடங்கள் கழித்தும் கூட இவரே உலக அழகிக்கு உதாரணம் ஆகிறார். வழக்கமான ரஜினி பட கதாநாயகிகள் போலின்றி படம் முழுவதும் வருகிறார். ராவணனில் கந்தல் துணிகளுடனும் ஒப்பனையின்றியும் ஐஸைப் பார்த்து நொந்த Eyes-க்கு எந்திரனில் குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல். Also she’s damn hot! ஒப்பனைக் கலைஞர்களுக்கு ரஜினியும் ஐஸ்வர்யாவும் தம் சம்பளத்தில் ஒரு தொகையை தாராளமாக வழங்கலாம்.  ஓரிரு காட்சிகளில் முதிர்ச்சி தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.  ஐஸ்வர்யாவிற்கு ஒரு வேண்டுகோள். இனி தயவு செய்து தாங்கள் நடிக்கும் தமிழ்ப்படங்களுக்கு பெண் ஆடை வடிவமைப்பாளரை நியமிக்கவும். சப்யஸாச்சி, மனிஷ் மல்ஹோத்ரா போன்றவர்கள் தங்களது முன்னழகைக் காட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். எனது விருப்பம் . தமன்னா, த்ரிஷா போன்றவர்களையே தேவதைகளாக மாற்றும் நளினி ஸ்ரீராமைப் பரிந்துரைக்கிறேன்.
To be contd…
Advertisements
 
Leave a comment

Posted by on October 2, 2010 in Movie Reviews, Movies

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: