RSS

ஸ்வர்ணலதா – நினைவலைகள்

13 Sep

பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா நேற்று புற்று நோயால் பாதிக்கப் பட்டு மரணம் அடைந்தார் என்ற குறுஞ்செய்தியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். நடிகர் முரளியின் மறைவிலிருந்து இன்னும் மீளாத நான் இச்செய்தியைக் கேட்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்த் திரை உலகிற்கு கடந்த வாரம் மிகவும் துயரமான வாரமாகியுள்ளது. 37 வயது ஒரு வயதா? அதுவும் நுரையீரல் புற்றுநோய். மனிதனின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது என்ற எச்சரிக்கை மணியும் எஸ்.எம்.எஸ்.ஸின் பீப் ஒலி போல் ஒலித்தது. “போயிட்டாளே பொன்னுத்தாயி” என்று என் தம்பி சொன்னது எனக்கு நகைச்சுவையாகப் படவில்லை.

1987ல் எம்.எஸ். விஸ்வனதனால் எஸ்.ஏ. சந்திரசேகரின் நீதிக்கு தண்டனை படத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார். பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை உன்னி மேனனுடன் சேர்ந்து பாடியபோது அவருக்கு வயது 14. அதன் பின் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1988ல் குரு சிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி என்ற Item Song போன்ற பாடலைப் பாடியுள்ளார்.  1990ல் சத்ரியன் படத்தில் மாலையில் யாரோ மனதோடு பேச என்ற மனம் வருடும் பாடலால் மயக்கினார். அப்பாடலில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், காட்சிகளின் குளுமையும், Location-களும் மிக அழகான பானுப்ரியாவும் கண்களுக்கும் காதுகளுக்கும் இனிய விருந்து.மெலடி பாடல்கள்தான் பாடுவார் என்று நினைத்தவர்கள் கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமா மற்றும் தளபதியின் ராக்கம்மா கையத் தட்டு போன்ற பாடல்கள் மூலம் தன்னால் எந்தவிதமான பாடல்களையும் பாட இயலும் என்று நிரூபித்தார். இவர் ஜேசுதாசுடன் பாடிய மாசி மாசம் ஆளான பொண்ணு மிகவும் பிரபலமானது. அவ்வகை பாடல்களை பாவத்துடன் பாடும் எஸ்.பி.பி- ஜானகி ஜோடிக்கே சவாலாக அமைந்தது

1991-ல் வெளிவந்த சின்ன தம்பி பிரபு, குஷ்பூ போன்ற பலருக்குத் திருப்புமுனை படமாக அமைந்ததுபோல் ஸ்வர்ணலதாவிற்கும் அமைந்தது. போவோமா ஊர்கோலம் மற்றும் நீ எங்கே என் அன்பே பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. ஜானகிக்கு அடுத்த படியாக கிராமிய திரைப் பாடல்களை அனாயாசமாக பாடக் கூடியவர்.  அதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே. மாலையில் யாரோ பாடல் கூட சித்ரா சிறப்பாக பாடியிருக்கக் கூடும். ஆனால் குயில் பாட்டு ஸ்வர்ணலதாவால் மட்டுமே இந்த அளவுக்கு வெகு சிறப்பாக பாடியிருக்க முடியும் என்பது என் கருத்து.  90களில் ஜானகியின் குரல் சற்று முதிர்ந்த நிலையில் ஸ்வர்ணலதாவுக்கு வாய்ப்புகள் அளித்தார் இளையராஜா. இவரது குரலின் Nativityயும் , கிராமிய உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது.

ஏ.ஆர் ரஹ்மானும் இவரது குரலை Folk Style பாடல்களுக்கு உபயோகித்தார். உசிலம்பட்டி பெண்குட்டி, குச்சி குச்சி ராக்கம்மா, ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு போன்ற பாடல்களை ரஹ்மானுக்குப்  பாடினார். இவரது சிகரமாகத் திகழ்ந்தது கருத்தம்மா படத்தில் வரும் போறாளே பொன்னுத்தாயி. இப்பாடல் சந்தோஷ டூயட்டாகவும், சோக சோலோவாகவும் வரும். சந்தோஷத்திற்கு சுஜாதாவைத் தேர்வு செய்த ரஹ்மான் சோகத்திற்கு மிகச்சரியாக ஸ்வர்ணலதாவைப் பாடவைத்தார். அவர் குரலினூடே வழிந்தோடும் சோகம் கேட்பவர் மனத்தைக் கரையச் செய்யும் வலிமை உள்ளது. அப்பாடலையும் பாடலின் வரிகளையும் கேட்டுக் கேட்டு என் அம்மா அழுவது  இப்போதும் எனக்கு ஞாபகம் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் பதிவு நாடாவில் (Tape Recorder) அப்பாடலை திரும்ப திரும்ப Rewind செய்து கேட்பார். அப்பாடல் ஸ்வர்ணலதவிற்கும் வைரமுத்துவிற்கும் தேசிய விருதைப் பெற்றுத் தந்த பொது மிகவும் பரவசம் அடைந்தார் என் அம்மா. அதேபோல் அலைபாயுதேவில் வரும் எவனோ ஒருவன் பாடலைக் கேட்டதும் என் அம்மா அழுதுவிட்டார். “அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…” என்பதன் அர்த்தத்தையும் எனக்குச் சொன்னார். இப்பாடலும் போறாளே பொன்னுத்தாயி போல பின்னணிப் பாடகிக்கும் பாடல் வரிகளுக்கும் தேசிய விருது பெறும் என்று அப்போது எண்ணினேன். ஆனால் கிடைக்கவில்லை.

தொடர்ந்து இளையராஜாவிற்கும் ரஹ்மானிற்கும் பல அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் எனைக் கவர்ந்த அவர் பாடிய பாடல்கள். ரஹ்மான் இவரது Versatality-ஐ உணர்ந்து முக்காலா முகாபுலா, அக்கடான்னு நாங்க உட போட்டா, மெர்குரிப் பூக்கள், ஏ முத்துப் பாப்பா போன்ற பாடல்களைப் பாட வைத்தார்.

குயில் பாட்டு
மாலையில் யாரோ
என்னுள்ளே என்னுள்ளே
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மலைக் கோவில் வாசலில்
நீ எங்கே என் அன்பே
வெடலப் புள்ள நேசத்துக்கு
மல்லிகை மொட்டு மனசத் தொட்டு
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

ரஹ்மானின் இசையில் எனைக் கவர்ந்த ஸ்வர்ணலதா பாடல்கள்

எவனோ ஒருவன்
போறாளே பொன்னுத்தாயி
ஹாய் ராமா
குளிருது குளிருது
மெல்லிசையே என் இதயத்தில்
காதலெனும் தேர்வெழுதி
சொல்லாயோ சோலைக்கிளி
முக்காலா முகாபுலா

மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் :

ஆத்தோரம் தோப்புக்குள்ளே – பாஞ்சாலங்குறிச்சி – தேவா
திலோத்தமா – ஆசை – தேவா
ஒ நெஞ்சே நெஞ்சே ரா ரா – முகவரி – தேவா
பொட்டு வைத்துப் பூமுடிக்கும் நிலா – நினைத்தேன் வந்தாய் – தேவா
கண்ணுக்குள்ளே காதலா – தமிழ் – தேவா
வெண்ணிலவே வெண்ணிலவே – காலமெல்லாம் காதல் வாழ்க – தேவா
பூவாட்டம் காயாட்டம் – அரவிந்தன் – யுவன் ஷங்கர் ராஜா
முத்தே முத்தம்மா – உல்லாசம் – கார்த்திக் ராஜா
திருமண மலர்கள் தருவாயா – பூவெல்லாம் உன் வாசம் – வித்யாசாகர்
அடி யாரது யாரது அங்கே – மேட்டுக்குடி – சிற்பி
அன்புள்ள மன்னவனே- மேட்டுக்குடி – சிற்பி
நட்சத்திர ஜன்னலில் – சூர்யவம்சம் – எஸ்.ஏ.ராஜ்குமார்
முதலாம் சந்திப்பில் – சார்லி சாப்ளின் – பரணி
துளித் துளியாய் – பார்வை ஒன்றே போதுமே – பரணி

இவர் இறுதியாக பாடியது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பீமா படத்தில் விஜய் ஏசுதாசுடன் பாடிய ரங்கு ரங்கம்மா பாடல். முதல் பாடல் அப்பாவுடனும் இறுதிப் பாடல் மகனுடனும் பாடியது Strange Coincidence!

மனதை விட்டு அகலாத பல பாடல்களைக் கொடுத்துள்ள ஸ்வர்ணா எப்போதும் அவரது பாடல்களின் உருவில் நம்முடன் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம். அவருடைய இசைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் என்னுடைய Caller Tune-ஐ “குயில் பாடு” பாடலுக்கு மாற்றியுள்ளேன் – என்னை அழைப்பவர்கள் ஒரு கணம் அவரை நினைத்து மனதார அஞ்சலி செலுத்தும் நம்பிக்கையில்!

May Her Soul Rest In Peace.

 
4 Comments

Posted by on September 13, 2010 in Music, Obituary

 

4 responses to “ஸ்வர்ணலதா – நினைவலைகள்

 1. srs

  September 14, 2010 at 9:23 am

  Sir…neenga oru nadamadum wikipedia..Only after reading your blog i came to know the face behind my fav songs 🙂

   
  • Kaarthik Arul

   September 16, 2010 at 3:19 pm

   Thanks Mani. Such an excellent singer with a unique voice. She will ;ive in the form of her everlasting songs

    
  • A.Srinivas

   September 20, 2010 at 12:07 am

   Mani Sir.. Neenga oru nadamaadum GOOGLE EARTH!!!! 🙂

    
 2. Bala

  September 27, 2010 at 10:42 pm

  I have been a craziest fan of ‘porale…’ during that time… however i dont know the soul behind that voice.. veen she’s alive, her songs speaks for her…

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: