RSS

முரளி – தமிழ்த் திரையின் நிரந்தர மாணவன்

08 Sep

இன்று நண்பகல் நடிகர் முரளியின் மரணச் செய்தி நண்பர் மூலம் அலைபேசியில் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். வேலைப் பளுவின் காரணமாக காலை  இணையத்தில் இயங்காமல் Client Office-ல் இருந்ததால் ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற தளங்களையும் மேயவில்லை.  எனவே நண்பன் சொன்னதும் நம்பாமல் வதந்தியாக இருக்குமென எண்ணி கூகுள் செய்து அதிர்ச்சியடைந்தேன். இத்தனைக்கும் நான் முரளியின்  ரசிகன்  இல்லை. அதிர்ச்சிக்குக் காரணம் அவரது இளம் வயது- 46. சென்ற மாதம்தான் தனது மகன் அதர்வாவின் முதல் படம் வெளியானது. இரண்டு வாரங்களுக்கு முன்புகூட காஃபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகனுடன் கலந்து கொண்டார். அதர்வாவைவிட உற்சாகமாய்த்  தோன்றினார்.

Actor Murali with his Son and Dad

முரளி – இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் கண்டெடுக்கப்பட்டு  தனது சிஷ்யர் இயக்குனர் அமீர்ஜானின் அறிமுகப் படமான பூவிலங்கில் அறிமுகப்படுத்தப் பட்டார். முரளியின் தந்தை பிரபல கன்னட இயக்குனர் சித்தலிங்கையா நடிகர் சரண்ராஜை கன்னடத்தில் அறிமுகம் செய்தவர். பூவிலங்கு படத்தில் முரளியின் முரட்டு இளைஞன் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவரது திராவிட நிறம் மாளவிகாவுக்குப் பிடித்தது போல தமிழ் மக்களுக்கும் பிடித்திருந்தது. அவருள் சராசரி இளைஞர் தங்களைக் கண்டனர். அன்றைய ஆனந்த விகடனும் முரளியின் நடிப்பை மிகவும் சிலாகித்து எழுதியது. அவ்விமரிசனம் சென்ற இதழ் விகடன் பொக்கிஷம் விகடன் பகுதியில் பிரசுரமாயிருந்தது http://twitpic.com/2me2mq . What an Irony!

மணிரத்னம்கூட தனது முதல் தமிழ்த் திரைப்படமான பகல் நிலவில் முரளியையே தேர்ந்தெடுத்தார். அதன்பிறகு கீதாஞ்சலி, புதியவன்  போன்ற கலவையான கதாபாத்திரங்களைச் செய்தார். விக்ரமனின் புது வசந்தம் அவர் வாழ்வில் வசந்தத்தை வரவேற்றது. இதயம் படம் அவரது திருப்புமுனை படம் என்றே சொல்லலாம். காதலைச் சொல்லத்தவிக்கும் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாய்ப் பொருந்தினார். அதுவே அவரது Trade Mark ஆனது. இன்றும் இதயம் சிறந்த காதல் பட வரிசையில் இடம் பிடிக்கும். நடிகர் மோகனுக்கு அடுத்தபடியாக அதிகமாக மைக்குடன் தோன்றியவர் முரளி. அவரைப் போலவே முரளியின் படங்கள் சுமாராக இருந்தாலும் பாடல்கள் பெரும் வெற்றிபெற்றன. இசைஞானியின் குரல் முரளிக்கு அற்புதமாய்ப் பொருந்தும். ஆத்தாடி பாவாட, பூமாலையே தோள் சேரவா, ஒரு ஜீவன் அழைத்தது, துள்ளி எழுந்தது பாட்டு,  என் பாட்டு என் பாட்டு, தோள் மேல தோள் மேல என்று பல பாடல்களை இசைஞானிக்கு வாயசைத்தது முரளியின் பாக்கியம்

காதலை மறைத்துக் கொண்டிருந்த முரளி டி.ராஜேந்தரின் சொன்னால்தான் காதலாவில் வித்தியாசமாக காதலைப் போட்டு உடைக்கும் கதாபாத்திரத்தில் தோன்றினார். சேரனின் பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, தேசிய கீதம் போன்றவை முரளியின் பன்முகப் பரிமாணங்களை மிளிரச் செய்தன. அவரது தோற்றம் கிராமத்துக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருந்தது. ஆனந்தம், சமுத்திரம் போன்ற படங்களில் பாசமிகு சகோதரனாகவும் நடித்தார். நடிகர் திலகத்துடன் நடித்த என் ஆச ராசாவே முரளிக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும். சூர்யாவுடன் காதலே நிம்மதியில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

பூவிலங்கு முதல் காலமெல்லாம் காதல் வாழ்க வரை கல்லூரி மாணவனாக பல படங்களில் தோன்றி காதலை மென்று விழுங்கினார். இவரது சக மாணவனாக இன்றும் சின்னி ஜெயந்த். தனது மகனுடைய படத்திலும் அதர்வா காதலைச் சொல்லத்தவிக்கும் காட்சியில் முரளி காதல் தோல்வியுற்ற கல்லூரி மாணவனாகத் தோன்றி காதலை மறைக்காதே என அறிவுரை அளிப்பார். துரதிர்ஷ்டவசமாக அதுவே அவரது கடைசிப் படமாகுமென்றும்,  இதயம் படத்தைப்போல் இதயம் நாயகனின் இதயத் துடிப்பு நின்றுவிடும் என்று எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. ஆனால் உண்மை. பூமாலையே தோள் சேரவா பாடலின் Prelude-ஐ Ringtone-ஆக வைக்க வேண்டும் என நேற்று மாலை தோன்றியது. அதுமட்டுமன்றி பகல் நிலவில் இது வரை நான் கேட்டிருந்தது மூன்றே பாடல்கள்தான். திங்களன்றுதான் அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் தரவிறக்கம் செய்தேன். இரண்டே நாட்களில் அவர் இறப்பார் என நினைக்கக் கூட முடியவில்லை.

அவரது இழப்பு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் தமிழ்த்திரையின்  நிரந்தர கல்லூரி மாணவனாகவே திகழ்வார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வளரும் நடிகரான மகனுக்கும் தனது காதல் மனைவி ஷோபாவிற்கும் அவர் மரணத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுக்குமாறு இறைவனைப் பிரார்த்திப்போம்.

May His Soul Rest In Peace!

Advertisements
 
3 Comments

Posted by on September 8, 2010 in Movies, Obituary

 

3 responses to “முரளி – தமிழ்த் திரையின் நிரந்தர மாணவன்

 1. Biji

  September 10, 2010 at 10:17 am

  Nice post.. also lets not ignore his Vaattakutti Iranian & Adharmam..:-)!! And btw, I read in newspapers that he has shared the screen with Superstar, Mammoothy, Kamal etc… which movies were they talking about..?? any idea..??

   
  • Kaarthik Arul

   September 16, 2010 at 3:39 pm

   Ya. Murali had different roles in Iraniyan & Adharmam. He shared screenspace with Mammootty in Aanandam. Don’t know abt Rajni & Kamal. Rajni’s stills & name come in the song “Karuppudhan enakku pudicha colouru…” from Vetri Kodi Kattu 😉

    
 2. Bala

  September 27, 2010 at 10:46 pm

  Even I’m not a great fan of him… but he’s always one of my fav actor in tamil cinema.. hope this is the case with most people..

  It is nothing but ‘Idhayam’ that comes to mu mind, when I think of Murali… such a touching performance was his in that movie… Adharmam too in my fav list…

  May his soul rest in peace…

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: