RSS

கண்டேன் மணிரத்னத்தை

16 Jul

நான் ஆதர்சமாக நினைக்கும் இரு இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணி ரத்னந்த்தை நேற்று சத்யம் பல்திரையரங்கத்தில் இரண்டாம் முறையாக மதராசபட்டினம் பார்க்கச் சென்ற பொது கண்டேன். உடன் அவரது மனைவியும் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவரான சுஹாசினியும் வந்திருந்தார். இருவரும் Inception படத்தின் Preview Show காண வந்திருந்தனர். மேலும் பல பிரபலங்கள் (விஜயலட்சுமி, கிருஷ்ணா, நந்தா, நரேன்) வந்திருந்தும், மணியைப் பார்த்ததும் ஸ்தம்பித்துவிட்டேன். நடப்பது கனவா நனவா என்று தெரியாமல் சில நொடிகளுக்கு சிலை போல நின்று கொண்டிருந்தேன் (கடவுள் பார்த்த பக்தன் போல!) மணிரத்னம் திரையில் பார்த்தது போலவே வெள்ளை Cotton Shirt-ம் வெள்ளை தாடியுடனும் தனக்கே உரிய அறிவு ஜீவிக் களையுடன் இருந்தார். ஆனால் சுஹாசினியோ நேரில் கூடுதல் அழகோடு இருந்தார். பல கேமராக்கள் மின்னிக் கொண்டிருந்தும், நான் அவர்களை ஒரு photo எடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. எனக்கு மிக மிக அருகில் கடந்து செல்லும்போதுதான் என் Cellphone- ஐ எடுத்து கிளிக்கினேன். கொஞ்சம் Blurred-ஆக வந்தாலும், காலத்துக்கும் என்னால் மறக்கமுடியாத புகைப்படம் ஒன்றை மனத்திரையில் படமாக்கினேன்.

மதரசபட்டினத்தின் முதல் இருபது நிமிடங்களை நான் பார்க்கவே இல்லை. மணியைக் கண்ட பரவசத்தை நண்பர்களுடன் SMS-ல் பகிர்ந்து கொண்டிருந்தேன். Twitter, Facebook-ஐ சப்போர்ட் செய்யும் கைபேசி வாங்க வேண்டுமென உறுதி கொண்டேன். இனி வியாழக்கிழமைகளில் சத்யத்தில் படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

P.S: Believe it or not, I was about to post the above picture in my Facebook yesterday morning. But due to internet connectivity problems, I couldn’t do that.

 
1 Comment

Posted by on July 16, 2010 in Filmy Freak, Mani Ratnam

 

One response to “கண்டேன் மணிரத்னத்தை

  1. Hathim

    July 27, 2010 at 2:59 pm

    I hope u like this review…
    http://mytalkingpoint.wordpress.com/

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: